பீஜிங்: கொரோனா வைரஸ் பயோவெப்பனாக பயன்படுத்தவே உருவாக்கப்பட்டதாக வூஹான் ஆராச்சியாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியது. இது சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதன் காரணமாக உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. வேகமாக பரவி இந்த வைரஸின் தாக்கம் காரணமாக கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஏராளமானோர் பலியாகினர்.
உயிர்பலி அதிகரித்ததால், உலக நாடுகள் செய்வது அறியாமல் திகைத்தனர். இதற்காக தடுப்பூசியை கண்டுப்பிடிக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்து, அதற்கான தடுப்பூசியும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கட்டுக்குள் இருந்தாலும் இது ஒரு பருவ கால நோய் போல், உலகத்தை மிரட்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சீனாவின் வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குற்றச்சாட்டினர்.
இதனால் இந்த வைரஸை சீனா பயோவெப்பனாக சீனா பயன்படுத்தி இருக்கலாம் என்ற கருத்துகளும் எழுந்தது. இந்நிலையில் சீன ஆராய்ச்சியாளர் சாவோ ஷவோ என்பவரிடம் நடத்திய நேர்காணலில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், கொரோனா வைரஸ் ஒரு பயோவெப்பன். வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரும் என்னுடைய மேலதிகாரியுமான ஷான் சாவோ,என்னிடம் கொரோனா வைரஸ் மாதிரிகளை நான்கை வழங்கினார். அதில் மனிதர்களை எளிதில் தொற்ற கூடியதும், வேகமாக பரவும் தன்மை மற்றும் வீரியமிக்க வைரஸ் எது என்ன கண்டறிய சொன்னார்.
2019ல் வூஹானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ விளையாட்டு போட்டிகளின்போது என் சக பணியாளர்கள் (வைரஸ் ஆராய்ச்சியாளர்கள்) தடகள வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாக தெரியவந்தது. ஏனென கேட்டபோது, வீரர்களின் உடல்நிலையை சோதிக்க சென்றதாக கூறினர். வீரர்களின் உடல்நிலையை அறிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை. வைரஸை வீரர்களிடம் பரப்புவதற்காகவே அவர்கள் அங்கு அனுப்பப்பட்டதாக ஷான் சாவோ கூறினார்.
அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் ஷான் சவோ, முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்குர் இஸ்லாமியர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக ஷின்யாங்கிற்கு அனுப்பப்பட்டார். வைரஸ் மனிதர்களுக்கு பரப்பி, அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கண்காணிக்க அனுப்பப்பட்டதாக அவேர உறுதியாக சொன்னார் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…