Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முதலைக்கு கோவில்..! படையலிட்டு வழிபடும் திருச்சி மக்கள்.. விநோத காரணம்!

UDHAYA KUMAR September 25, 2022 & 16:09 [IST]
முதலைக்கு கோவில்..!  படையலிட்டு வழிபடும் திருச்சி மக்கள்.. விநோத காரணம்!Representative Image.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அருகே அந்த அணை வடக்கே பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால மற்றும் காவிரி கரையோர வாய்க்கால் ஆகிய இரண்டும் சங்கமிக்கும் அந்த ஒரு இடத்தில்தான் முதலைக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர் சங்கமிக்கும் இந்தப் பகுதியில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை,  முதலைகள் அதிகம் வசித்து வந்தன.  முதலைகள் நீரிலும், நிலத்திலும் வாழும் ஜீவ ராசிகள் என்பது நமக்கு தெரியும்.  காவிரிக் கரையிலிருந்து நிலப்பகுதிக்கு வந்த சில முதலைகள் சாப்பிட உணவின்றியும், வாழ்வதற்கு உகந்த சூழல் இன்றியும்  முதலைகள் இறந்துள்ளன. 
 

முதலைக்கு கோவில்..!  படையலிட்டு வழிபடும் திருச்சி மக்கள்.. விநோத காரணம்!Representative Image

முதலையின் சாபம்

அங்குள்ள ஆற்றுநீர் மீனவர்கள், மீனுக்காக இட்டுள்ள வலையில் மாட்டிய சிறுசிறு முதலைகளைப் பிடித்து வேறொரு இடத்துக்கு சென்று விடுவதும்,  வளர்ப்பதுமாக இருந்து வந்துள்ளனர். வளர்ந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு கொண்டு விடப்பட்டுள்ளதால், முதலைகள் உணவு உண்ண முடியாமல் தவித்துள்ளன.  சாப்பிடாமல் கிடந்த முதலைகள் உயிர் இழந்ததோடு, கிராமத்துக்கும் சாபத்தை வழங்கியுள்ளதாக அப்போதுள்ள மக்கள் கருதியுள்ளனர். தாங்கள் சந்தித்த துன்பங்களுக்கு இந்த பாவம்தான் காரணம் எனவும் நினைத்துள்ளனர். இதனால், பிடிபடும் முதலைகளை மீண்டும் அவைகளை காவிரி ஆற்றிலேயே விட்டுள்ளனர்.

முதலைக்கு கோவில்..!  படையலிட்டு வழிபடும் திருச்சி மக்கள்.. விநோத காரணம்!Representative Image

துன்பம் போக்கும் வாத்தலை காத்தவராயன்

முதலைக்கும், கிராமத்தினருக்கு ஏற்பட்ட துன்பங்களை போக்க வாத்தலை காத்தவராய சுவாமிக்கு விரதமிருந்து பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். முதலைகளை யாரும் துன்புறுத்தக்கூடாது. அவைகள் பாதுகாப்போடு வசிக்க வேண்டும் என அப்பகுதியினர் முடிவெடுத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த இடத்தில் வலையிட்டு மீன் பிடிப்பதை தவிர்த்தனர். சிலர் வலையில் மாட்டிய முத லை குஞ்சுகளை மீண்டும் ஆற்றிலேயே விட்டனர்.

முதலைக்கு கோவில்..!  படையலிட்டு வழிபடும் திருச்சி மக்கள்.. விநோத காரணம்!Representative Image

சிலை வைத்து வழிபாடு

கரை ஒதுங்கும் முதலைகளின் துன்பத்தை போக்குவதற்கு முதலைகளுக்கு உணவிடவும் தொடங்கினர். முதலைகள் உணவு உண்பதை விட கிராமத்தினர் ஊற்றும் பாலை விரும்பி குடித்து வந்துள்ளன. மேலும், கிராமத்தினரையும் முதலைகள் எதுவும் செய்யாமல் இருந்துள்ளன. முதலையை பாதுகாத்திடும் வகையில் முதலைக்கு சிலை வைத்தும் கிராமத்தினர் வழிபடத் தொடங்கியுள்ளனர்.

இதில், வாத்தலை காத்தவராய சுவாமிக்கு அட சல் பொங்கலிட்டு அபிஷேக ஆராதனையுடன் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கழுவேற்று விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்று திரளான கிராமத்தினர் முதலை பாருக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்