கோவையில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 5 இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் 10மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதாக கூறி ஏழை எளிய மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து பணத்தை மோசடி செய்து வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அடுத்தடுத்து 7 புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில் ரகசிய தகவல் மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸா (28), ஜமேஷ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகிய 5 பேரை மடக்கி பிடித்தனர். விசரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.
பிடிபட்ட 5 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, நண்பர் மூலம் டெல்லி சென்று எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என பயிற்சி எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர். இணையம் மூலமாக அன்மையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை திருடி அதை வைத்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சாதரன அழைப்புகள் மூலம் அழைத்து, அவர்களது குழந்தைக்கு தமிழக அரசின் சார்பில் கல்வி உதவி தொகை வந்துள்ளதாகவும், அதனை வங்கி கணக்கிற்கு அனுப்பியாச்சு எனக்கூறி போலியான ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகின்றனர்.
மேலும் அதனை பதிவு செய்ய QR code அனுப்பியுள்ளதாக கூறி அதனை ஸ்கேன் செய்யுமாறு கூறுகின்றனர். அதனை அப்பாவி மக்கள் நம்பி ஸ்கேன் செய்யும் போது அவர்களது வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் இந்த இளைஞர்கள் எடுத்து விடுகின்றனர். மேலும் அதனை வைத்து சுமார் ஆயிரம் முதல் வங்கியும் உள்ள அனைத்து தொகையையும் எடுத்து கொள்கின்றனர்.
பெரும்பாலும் ஏழை எளிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுக்கு பணம் வங்கி கடக்கில் இருந்து எடுக்கப்பட்டது கூட தெரியாமல் இருந்துள்ளனர். மேலும் மோசடி கும்பல் மக்களை நம்ப வைக்க அரசு லோகோவையும் பயன்படுத்தியுள்ளனர். கோவையை சேர்ந்தவர்களிடம் மட்டும் ரூ.7 லட்சம் போசடி செய்துள்ளதும், இதுவரை கிடைத்த தகவல் அடிப்படையில் 500 பேரிடம் இவ்வாறு மோசடி செய்து பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து மொத்தமாக அழித்துள்ளனர். தற்போது பள்ளி சீசன் என்பதால் அதனை பயன்படுத்திய கும்பல் அடுத்த மோசடிக்கும் தயாராகி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகம், ஒரு காசோலை, 7 ஏ.டி.எம் கார்டுகள், ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் அரசு கல்வி தொகை, அரசு சலுகைகள் வழங்குவதாக கூறி செல்போனுக்கு அழைப்பு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…