கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், குரங்கம்மை என்ற புதிய நோயும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய்கிழமை அதாவது நேற்று ஒரு நாளில் மட்டும் கேரளாவில் 1,197 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கேரளாவில் கொரோனாவுக்காக மட்டும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…