Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

கத்தரிக்கோலால் தாக்கி.. முதல் மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட மாணவி.. ஆசிரியை வெறிச்செயல்!!

Sekar Updated:
கத்தரிக்கோலால் தாக்கி.. முதல் மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட மாணவி.. ஆசிரியை வெறிச்செயல்!!Representative Image.

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து 5ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் கத்தரிக்கோலால் தாக்கி கீழே வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்தனா என்ற அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கீதா தேஷ்வால் என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். 

பள்ளியை நடத்தும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. டெல்லி நகர் நிகாம் பிராத்மிக் வித்யாலயாவில் நேற்று காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

கீதா தேஷ்வால், வந்தனாவை ஆத்திரத்தில் முதல் மாடி வகுப்பறையில் இருந்து தூக்கி எறிவதற்கு முன்பு கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். எதேச்சையாக இதை கண்ட மற்றொரு ஆசிரியையான ரியா, இதில் தலையிட்டு சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் கீதாவால் சிறுமி கீழே வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

முதல் மாடியில் இருந்து சிறுமி விழுந்ததும், ஏராளமானோர் திரண்டனர். பலத்த காயமடைந்த குழந்தை பாரா இந்து ராவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"சிடி ஸ்கேன் உட்பட தேவையான அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தை பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளது மற்றும் நன்றாக பேசுகிறார்" என்று டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தன் குழந்தை கீழே வீசப்பட்டதை அறிந்த வந்தனாவின் தாய் கதறி அழுதார்.

குடியிருப்பாளர்கள் போலீசாரை அழைத்தனர், அவர்கள் ஆசிரியரை அழைத்துச் சென்றனர். அவர் கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஸ்வேதா சவுகான், சாட்சிகளின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி கூறினார்.

குழந்தை விழுந்த இடத்தில், ஒரு ஜோடி கையுறைகள் மற்றும் சில எழுதுபொருட்கள் சிதறிக் கிடந்தன.

இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பள்ளிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குழந்தையின் வகுப்பறையில் எழுதுபொருட்கள், பைகள் மற்றும் தளபாடங்கள் சிதறிக் கிடப்பதைப் படங்கள் காட்டின. ஆசிரியர் அவர்களுக்கு தீங்கு செய்ய முயன்றதால் மாணவர்கள் பயந்து வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர் என்று போலீசார் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்