சென்னை பெருநகர காவல்துறையில் புதிய டிரோன் காவல் பிரிவை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.
தமிழக காவல்துறையில் அண்மைக்காலமாக டிரோன் பயன்பாடு அதிகரித்துவருகிறது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், குற்றவாளிகள் தேடுதல், கள்ளச்சாராய ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் டிரோன்களை அதிக அளவில் காவல்துறையினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். காவல்துறையின் செயல்பாடுகளில் டிரோனின் பங்களிப்பு அதிகரித்துள்ள நிலையல், சென்னை பெருநகர காவல்துறையில் புதிதாக ட்ரோன் காவல் பிரிவு இன்று தொடங்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்தப் புதிய பிரிவைத் தொடங்கி வைத்தார்.
ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு, போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து உடனே சரிசெய்வது, திருவிழா போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில் கண்காணிப்பை மேற்கொள்வது போன்ற பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள டிரோன்களை 5 கி.மீ தொலைவு வரை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்க முடியும். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக சென்னை பெருநகர காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…