Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கார்த்திகை தீப திருவிழா - டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை!

Kanimozhi Updated:
கார்த்திகை தீப திருவிழா - டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை! Representative Image.

கார்த்திகை தீபத்தன்று போலி பாஸ் பெற்று அண்ணாமலையார் கோயிலுக்குள் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் வரும் 6ம் தேதி கார்த்திகை தீபா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோயில் வளாகம் மற்றும் கிரிவல பாதையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கார்த்திகை தீப திருவிழாவிற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளது என்றும், திருவண்ணாமலைக்குள் வர உள்ள 4 முக்கிய சாலைகளிலும் வாகன தணிக்கை ஈடுபட்டு வருவதாகவும், 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

பக்தர்களுக்கு பார்கோடு வசதியுடன் கூடிய பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு, போலி பாஸ் பெற்று கோயிலுக்குள் நுழைய முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். குற்றங்களை தடுக்க வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து திருவண்ணாமலையில் தங்கியுள்ளோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்