Fri ,Mar 24, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

காங்கிரஸ் தலைவர் பதவி.. நானும் களத்தில் இருக்கேன்.. முன்னாள் முதல்வர் அதிரடி!!

Sekar September 29, 2022 & 14:32 [IST]
காங்கிரஸ் தலைவர் பதவி.. நானும் களத்தில் இருக்கேன்.. முன்னாள் முதல்வர் அதிரடி!!Representative Image.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை பெற்றார். 

கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் நிலை தற்போது சிக்கலில் உள்ள நிலையில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜயசிங், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சமீபத்திய போட்டியாளராக இணைந்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திக் விஜயசிங், "நான் வேட்புமனுவை வாங்கிவிட்டேன். அநேகமாக நான் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்." என்றார். 

கட்சித் தலைமையின் உத்தரவின்படி வேட்பு மனு தாக்கல் செய்கிறாரா? போட்டியில் உறுதியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "நானே பொறுப்பு. வாபஸ் பெறும் தேதி வரை காத்திருங்கள்." என்று திக் விஜயசிங் கூறியதோடு, நீங்கள் ஏன் என்னைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று செய்தியாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பினார்.

கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருப்பதால், திக் விஜயசிங் பாரத் ஜோடோ யாத்திரையை நடுவழியில் விட்டுவிட்டு கடந்த நேற்று இரவு டெல்லிக்கு வந்தார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் ராகுல் காந்தியை கேரளாவில் கட்சியின் பாரத் ஜோடோ யாத்ராவில் சந்தித்து நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். தற்போது வரை சசி தரூர் மட்டுமே பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

இந்நிலையில், நேற்று இரவு டெல்லி வந்தடைந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள் எழுந்துள்ள உள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார். இதன் மூலம் அவரும் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்