Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

“ஆளுநரே வெளியேறு”... விசிக, காங்கிரஸ் வெளிநடப்பு; சட்டப்பேரவையில் சலசலப்பு! 

KANIMOZHI Updated:
“ஆளுநரே வெளியேறு”... விசிக, காங்கிரஸ் வெளிநடப்பு; சட்டப்பேரவையில் சலசலப்பு! Representative Image.

தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குற்றஞ்சாட்டியுள்ளார். 

2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பமானது. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு குறித்த சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்ததால் இன்று அவையில் அமளி வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கியதுமே விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தனர். 

'தமிழ்நாடு வாழ்க', 'எங்கள் நாடு தமிழ்நாடு' என முழுக்கமிட்டு ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, த.வா.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு முழக்கங்களை எழுப்பி வந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்