சென்னையில் இன்று நடந்துவரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாராக அமைச்சர் துரைமுருகனும், பொருளாளராக எம்பி டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில், திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டதோடு, சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக கனிமொழி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…