கோவை: மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பது முதல்வர் மு.க ஸ்டாலினா? அல்லது பிரதமரா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை உக்கடம் அருகேயுள்ள கெம்பட்டி காலனி பகுதியில் இருக்கும் ஒக்கிலியர் பள்ளில் கோவை தெற்கு தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி மையம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமண விழாவில் எதிர்கட்சியினரை வசைப்பாடுவது, சாபம் கொடுப்பது திராவிட மாடலா?இது அநாகரிகம். குடும்ப அரசியல் செய்யும் திமுக குறை கூற அருகதையில்லை. முதல்வர் திருமண வாழ்த்துகளை மீறி கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
பிரதமர் பேசியது 100சதவீதம் உண்மை. அவர் பொய் பேசவில்லை. குடும்ப ஆட்சி நடக்கவில்லை என்று கூறுங்கள். வாரிசு என்ற காரணத்திற்காக பதவி கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். மகன் என்பதால் விளையாட்டு துறை அமைச்சருக்கு முக்கியத்துவம். சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். மத கலவரத்தை உருவாக்குவதாக கற்பனையான விஷயத்தை முதல்வர் சொல்கிறார்.
பொதுசிவில் சட்டம் காலத்தின் தேவை. முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு நீதியை கொடுத்தது. சுயநல அரசியலுக்காக பெண்களின் வாய்ப்பை பறிக்க கூடாது. கோவில் பிரச்னையில் அரசாங்கத்தால் அணுகமுடியவில்லை. பெரியார் மண் என்று சொல்லுகிற இந்த மண்ணில் சாதியில் மக்கள் மனதில் ஏன் மாற்றத்தை கொண்டுவரமுடியவில்லை.
உங்கள் அமைச்சர்களே பட்டியல் இன மக்களை இழிவாகப் பேசுகின்றனர். ஜம்முவிற்கு 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதனால் அம்மக்கள் ஜனநாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதியை பாஜக தெரிவித்துள்ளது. முதல்வர்தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாரா? முதல்வராக வாழ்த்து தெரிவித்துள்ளாரா?
பிரதமர் மோடி அனைத்து மதத்தையும் சமமாகப் பார்க்கிறார். உதயநிதி படத்திலும் நடிக்கிறார், வெளியிலும் நடிக்கிறார். திமுகவிற்கு வாக்களிப்பது குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பது, ஊழலுக்கு வாக்களிப்பது என நாங்களும் சொல்கிறோம். மதுபான அதிக விலை தொடர்பாக ஆதாரம் கேட்ட அமைச்சர் மருத்துவமனையில் உள்ளார். இந்து அறநிலையத்துறை திட்டமிட்டு சிதம்பரம் கோயில் விவகாரத்தில் வேலை செய்கின்றனர். பிரச்னையை கிளப்பவே செயல்படுகின்றனர். இந்து மத விரோத எதிர்ப்பு நாடறிந்தது. சிதம்பரம் கோயில் பிரச்சனையில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…