இண்டிகோ நிறுவன பயணிகள் விமானம் குஜராத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இண்டிகோ விமானம் (6E-645) ஒன்று புறப்பட்டு சென்றது. குஜராத் மாநிலத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அட்டாரி வழியாக பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்தது என்றும், ஆனால் சிறிது நேரத்திலேயே விமானம் இந்திய வான்பகுதிக்கு திரும்பிவிட்டது என்றும் இண்டிகோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானம் வழி மாறியது பற்றி அமிர்தசரஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். பின்னர் அந்த விமானம் அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு வடக்கு லாகூரில் நுழைந்த விமானம் இரவு 8.01 மணிக்கு மீண்டும் இந்திய வான்பகுதிக்கு வந்தது.
மோசமான வானிலை காரணமாக வான் எல்லையைத் தாண்டுவது சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அசாதாரண நிகழ்வல்ல" என பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எதிர்பாராத விதமாக வானிலை மோசமடையும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு நேர்வது இயல்புதான் என்றும், இதனால் விமானத்தின் பாதுகாப்புக்கு அபாயம் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. கடந்த மே மாதம் 4ஆம் தேதி பாகிஸ்தானில் பலத்த மழை பெய்தபோது ஓமன் தலைநகா் மஸ்கட்டில் இருந்து திரும்பிய பாகிஸ்தான் பிகே 248 விமானம், இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…