வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரண்யத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
சென்னைக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் தீவிர புயலான மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்திற்குள் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும், இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் போது 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. வேதாரண்யத்தில் நிலவி வரும் கடல் சீற்றம் காரனமாக 5 அடிக்கு மேல் அலைகள் எழுந்து வருகிறது. கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தள்ளி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர் இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
புயல் பாதிப்புகளை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…