Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

3 நாட்கள் விசிட்.. மாலத்தீவு சென்றடைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!!

Sekar Updated:
3 நாட்கள் விசிட்.. மாலத்தீவு சென்றடைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!!Representative Image.

மாலத்தீவுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு சென்றடைந்தார்.

இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக ஜெய்சங்கர் மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக செல்கிறார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட ட்வீட்டில், "வெளியுறவு அமைச்சராக நான்காவது பயணமாக மாலத்தீவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. அன்பான வரவேற்புக்கு நன்றி அப்துல்லா ஷாஹித். இந்தியாவின் 'அண்டை நாடு முதலில்' மற்றும் மாலத்தீவின் 'இந்தியா முதலில்' கொள்கைகளின் ஒருங்கிணைப்பு மேலும் வலுவடைகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மாலைதீவு சென்றடைந்த ஜெய்சங்கரை, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வரவேற்றார்.

மாலத்தீவில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜெய்சங்கர் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹையும் சந்தித்து வெளியுறவு அமைச்சர் ஷாஹித்துடனும் கலந்துரையாடுவார்.

மாலத்தீவு தலைநகரான மாலேவிற்கான பயணத்தில், இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், அடிக்கல் நாட்டுதல்/ திறப்பு விழா/ ஒப்படைப்பு மற்றும் மாலத்தீவின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கும் பல முக்கிய இந்தியா ஆதரவு திட்டங்களின் தொடக்கம் ஆகியவை இடம் பெறும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடுகள் என்றும், பிரதமரின் 'சாகர்' (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் 'அண்டை நாடு முதலில்' என்ற பார்வையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்