Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

சோனியா ராகுலுக்கு செக்.. அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்!!

Sekar June 01, 2022 & 14:35 [IST]
சோனியா ராகுலுக்கு செக்.. அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்!!Representative Image.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக அமலாக்க இயக்குனரகம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. 

தகவலறிந்த வட்டாரங்களின்படி, நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு நாளிதழின் உரிமையாளரான யங் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் நிதி முறைகேடுகளை விசாரிக்க சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஏஜென்சி விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

1942ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர். இன்று மோடி அரசும் அதையே செய்கிறது. இதற்கு அமலாக்க இயக்குனரகம் யன்படுத்தப்படுகிறது என்று சுர்ஜேவாலா கூறினார்.

"அமலாக்க இயக்குனரகம் என்பது பிரதமர் மோடியின் செல்லபிள்ளை மற்றும் அவருக்கு விருப்பமானது. இது பொதுமக்களின் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பயன்படுத்தப்படுகிறது. இந்த அரசாங்கம் பழிவாங்கும் அரசியலை செய்கிறது" என்று சுர்ஜேவாலா இன்று கூறினார்.

நேஷனல் ஹெரால்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் ஆல் வெளியிடப்பட்டது மற்றும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. முன்னதாக இது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பவன் பன்சால் ஆகியோரிடமும் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்