சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் 4 நாட்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடங்களில் ஜுன் 11 முதல் 15ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் ரயில் பணிமனையில் பராமரிப்பு வேலைகள் 11,12,13,மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இன்று ஜூன்10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 14ம் தேதி இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கடற்கரையில் இருந்து அதே 4 நாட்களில் இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…