Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அவை மாண்பை கெடுக்காதீர்கள்… கலகம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா…! கடும் அமளியில் சட்டசபை கூட்டத்தொடர்..

Gowthami Subramani October 18, 2022 & 10:30 [IST]
அவை மாண்பை கெடுக்காதீர்கள்… கலகம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா…! கடும் அமளியில் சட்டசபை கூட்டத்தொடர்..Representative Image.

தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே ஆன மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஈபிஎஸ் சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்காத நிலையில், இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் அவரவர்களுக்கான இருக்கையில் அமர்ந்துள்ளது. இதில் பேரவை தொடங்குவதற்கு முன்பே, பன்னீர் செல்வம் அவரது இருக்கையில் வந்து அமர்ந்திருந்தார்.

இதில் கேள்வி நேரம் தொடங்கும் நேரத்தில், பழனிச்சாமி, சபாநாயகரிடம் தான் அனுப்பிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி துணைத் தலைவர் தொடர்பான கடிதத்திற்கு எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என பழனிச்சாமி தொடர்ந்து சபாநாயகரிடம் உரை எழுப்பி வந்தார்.

கொதித்தெழுந்த சபாநாயகர், கேள்வி நேரம் முடிந்த பின்பு நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன் என கூறினார். இதற்கு கடந்த 1989 ஆம் ஆண்டு, முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் குற்றப்பத்திரிக்கையை படித்துக் கொண்டிருக்கும் போதே அதை வாங்கி கிழித்துப் போட்டது போல, இப்போதும் அதே கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், சபாநாயகர், அவையின் மாண்பை கெடுக்காதீர்கள். சபையை நடத்த விடாமல் கலகம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று பழனிச்சாமி தரப்பினரிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர், கடும் வாக்குவாதத்திற்குப் பின்னரும் இந்த நிலை தொடங்கியதால், சபாநாயகர் பழனிச்சாமி தரப்பினரை வெளியே செல்ல உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், அவர்களை முழுமையாக வளாகத்தை விட்டு வெளியே செல்ல சபாநாயகர் உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்