நாங்கள் குட்கா சோதனை செய்ய வந்துள்ளோம் என கூறி 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையவரிசை காட்டிய கயவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர் பகுதியில் தாய் திலகம் மகன் கவியரசன் ஆகியோர் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அதற்கு எதிரே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கவியரசு மற்றும் கடையில் தனியாக இருந்துள்ளார் அப்போது வெள்ளை நிற காரில் வந்த 4 பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர் உங்கள் கடையில் குட்கா உள்ளதா என சோதனையிட வேண்டும் என கூறி கடை முழுவதும் சோதனையிட்டுள்ளனர்.
கடையில் ஏதும் கிடைக்காததால் வீட்டில் சோதனையிட வேண்டும் என கூறி வீட்டிற்குள் புகுந்த அவர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டுள்ளார். பின்னர் எதுவும் கிடைக்காத நிலையில் வெளியே வந்துள்ளனர். பின்னர் கவியரசை காரில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்று பின்னர் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த கவியரசு வீட்டிற்கு வேகமாக சென்று பணம் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் பணம் ஆகியவற்றை வந்தவர்கள் திருடி சென்றுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது வந்தது போலீசார் அல்ல போலியானவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் கவியரசு காவல் நிலையத்தில் இது குறித்து அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் அவர்களை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…