பிரபல ரவுடி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது பல்வேறு வழக்கு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை ரவுடி ஜெயகுமார் மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்து மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்து வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்தனர். மேலும் இறந்த கொக்கி குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கொக்கி குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் நாகமலை புதுக்கோட்டை அரசு மாணவர் விடுதி காலியிடத்தில் நேற்று குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொக்கி குமார் அப்பகுதி இளைஞர்களின் செல்போனை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து இன்று மாலை அதே இடத்தில் ஏற்பட்ட வாய்தகராறில் கைகலப்பாக மாறியது இதில் 5 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக தாக்கி கொக்கி குமார் மீது கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். குடி போதையில் ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…