Wed ,Nov 30, 2022

சென்செக்ஸ் 62,714.55
209.75(0.34%)
நிஃப்டி18,630.10
67.35(0.36%)
USD
81.57
Exclusive

மனைவியின் மீது சந்தேகம்.. பெற்ற மகளைக் கொன்ற தந்தை… வெளிவந்த பகீர் காரணம்…

Gowthami Subramani September 25, 2022 & 13:00 [IST]
மனைவியின் மீது சந்தேகம்.. பெற்ற மகளைக் கொன்ற தந்தை… வெளிவந்த பகீர் காரணம்… Representative Image.

மதுரையில் பெற்ற மகளை கொலை செய்து தனது வாளியில் அடைத்து பரண் மீது அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும், அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் எட்டு வயது மகள் இருந்தாள். காளிமுத்து கடந்த 13 ஆம் தேதி தனது மகள் தன்ஷிகாவுடன் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்றார். பின்னர் கணவரும் மகளும் வீட்டிற்கு வர வில்லை. கணவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததால், அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி போலீசில் புகார் செய்தார்.

பிறகு, பிரியதர்சினியின் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையிடம் கூறினர். அப்போது வீட்டில் பரண் மீது இருந்த வாளியை கீழே இறக்கி பார்த்த போது, அதில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி அழுகிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, வெளிவந்த அறிக்கையில் போலீசார் விசாரித்ததில் காளிமுத்து சந்தேகக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. மனைவி மீது எழுந்த சந்தேகத்தினால், பெற்ற மகளையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிர்ச்சி சம்பவம்.. பெண்ணின் ஆடையை கிழித்து கிளப் பாதுகாவலர் அட்டூழியம்..

Tag: Crime |Daughter Death |Father Escape |மர்மமான முறையில் மகள் உயிரிழப்பு |தந்தை தலைமறைவு |மதுரை |அதிர்ச்சி சம்பவம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

BEST DEALS AND DISCOUNTS