Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Students Fight : பள்ளி மாணவிகளிடயே குடுமிப்பிடி சண்டை..? இணையத்தில் வைரல்..!

Muthu Kumar May 19, 2022 & 07:57 [IST]
Students Fight : பள்ளி மாணவிகளிடயே குடுமிப்பிடி சண்டை..? இணையத்தில் வைரல்..!Representative Image.

Students Fight : பெங்களூரில் புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளியின் மாணவிகள் சிலர் யூனிபார்முடன் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைராகியுள்ளது.

மாணவர்களின் அட்டூழியங்களின்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சில பள்ளி மாணவ - மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபகாலத்தில் தமிழகத்தில் நடந்த பல்வேறு பள்ளி மாணவர்களின் அட்டூழியங்களின் வீடியோ வைரலானது. இதனால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துமீறும் மாணவர்கள்

இந்தியாவில் கொரோனா பரவல் காலத்தில் இணையவழி கல்விக்காக மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினர். இந்நிலையில், தற்போது செல்போனை பள்ளி வகுப்பறைக்கும் எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என பலல கட்டுப்பாடுகள் போடப்பட்டாலும் பல மாணவர்கள் அதை பின்பற்றுவது இல்லை. மேலும் பள்ளியில் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடி பொழுதை கழிக்கின்றனர். 

மாணவ - மாணவிகளிடயே மோதல்

இந்நிலையில் சமீபகாலமாக பள்ளி மாணவிகள் தெருவில் நின்று தலைமுடியை பிடித்து இழுத்து ஒருவரையொருவர் பயங்கராமாக தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

குடுமிப்பிடி சண்டை

பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளி மாணவிகள் பள்ளி சீருடையில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொள்கிற வீடியோ வைரலாகியுள்ளது. மேலும் நடைபாதையில் மாணவியை கீழேதள்ளி சண்டையிட்டு கொள்கின்றனர். மேலும் படிக்கட்டில் இறங்கும் மாணவியின் தலைமுடியை பிடித்து ஆக்ரோஷமாக இன்னொரு மாணவி இழுத்து தகராறில் ஈடுபடுகிறார். இதனை பார்த்த பொதுமக்கள் மாணவிகளை தடுக்க முயன்றாலும் தொடர்ந்து ஒருவைரையொருவர் தாக்கி கொண்டனர். இத்ச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வீடியோ வைரல்

தற்போது இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்