Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

மூக்கை வைத்து கின்னஸ் சாதனை செய்த இளைஞர்..வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!

madhankumar June 20, 2022 & 15:03 [IST]
மூக்கை வைத்து கின்னஸ் சாதனை செய்த இளைஞர்..வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!Representative Image.

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு, மூச்சுப்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் என்ற முறையினை பயன்படுத்தி 3 லாரி டியூப்களில் தனது மூக்கின் மூலம் காற்றை நிரப்பி கின்னஸ் சாதனை செய்துள்ளார் சேலத்தை சேர்ந்த இளைஞர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் கின்னஸ் சாதனைகள் உள்பட 97 வகையான சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடராஜ், தனது 98வது சாதனையை இன்றைய தினம் நிறைவு செய்தார். நீதித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 9 நிமிடம் 45 வினாடிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ‘வோர்ல்டு டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’என்ற நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்