உச்ச நீதிமன்றத்தில் இன்று திடீரென நிகழ்ந்த தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் யூகோ வங்கி ஒன்று இயங்கி வருகிறது, இந்த வங்கியில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாப்பு துறையினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில பரவி இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதையடுத்து, காலை 10.05 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வங்கியின் தரை தளத்தில் உள்ள கரன்சி பெட்டகத்தின் உள் கூரையில் தீ விபத்து ஏற்பட்டதுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…