ஈரான் நாட்டில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 பேரு உடல் கருகி பலியானது பெரும் சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்ற இடத்தில், மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில், அரசு எதிர்ப்பாளர்கள், வெளிநாட்டு கைதிகள் போன்றோர் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இந்த சிறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம், சிறையில் கைதிகள் இரு தரப்பினருக்கு மோதல் நடந்துள்ளது. இந்த மோதலின் போது, துணி கிடங்கில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில், வேகமாக பரவிய தீயானது, சிறைச்சாலை முழுவதும் பரவி, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகத் திகழ்ந்தது. இந்த தீ விபத்தால், பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சிறைக்கு வெளியே பெரும் கூட்டம் திரண்டது.
அவர்கள், சிறைக்குள் குண்டு வெடிப்பு, துப்பாக்கி போன்ற சத்தம் கேட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதற்கிடையில், சிறையில் தீ பரவிய வந்த தகவலின் பேரில், சிறை அதிகாரிகள், விரைந்து தீயணைப்பு வீரர்களை அழைத்து வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் தீயில் சிக்கி 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…