Flower exhibition : முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக தோட்டக்கலை துறை சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது.
தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக, ஏராளமான வண்ண மலர்கள் கலைவாணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அங்கு மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்த மலர்க் கண்காட்சி நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மலர் கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் சிறுவர்களுக்கு 20ருபாய் மற்றும் பெரியவர்களுக்கு 50ருபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…