Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
0.00sensex(0.00%)
நிஃப்டி22,405.60
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

பல்வேறு நாடுகளில் பரவிவரும் காட்டு தீ....எச்சரிக்கையாக இருக்க ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்..!

madhankumar July 17, 2022 & 16:32 [IST]
பல்வேறு நாடுகளில் பரவிவரும் காட்டு தீ....எச்சரிக்கையாக இருக்க ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்..!Representative Image.

பல்வேறு நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால் ஐரோப்பா முழுமையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், துருக்கி, கிரீஸ் என பல்வேறு நாடுகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இங்கு பத்து நாட்களாக பல ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஆகியவை பணியில் ஈடுபட்டிருந்தாலும் இதுவரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த காட்டு தீயானது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வரும் இத்தாலியில் இந்த காட்டு தீ பைன்மர காடுகளுக்கு இடையே உள்ள சோள காடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதேபோல் மொரோக்கா நாட்டிலும் நகருக்கு அருகிலேயே உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாததால் பல்வேறு மக்கள் தங்கள் தங்கியிருக்கும் வீடுகளை இழந்து வெளியேறி வருகின்றனர். தீயால் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்