Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

காஷ்மீரில் நடைபெறப் போகும் G-20 உச்சி மாநாடு...அப்படி என்ன நடக்கும் | G20 Summit 2023 Kashmir

Priyanka Hochumin Updated:
காஷ்மீரில் நடைபெறப் போகும் G-20 உச்சி மாநாடு...அப்படி என்ன நடக்கும் | G20 Summit 2023 KashmirRepresentative Image.

2023 ஆம் ஆண்டில் இந்தியா உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக நிற்கிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனை விரிவாக தெரிவிக்கம் வகையில் ஜார்ஜீவாவின் கூற்றானது,"பல சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களை எதிர்கொள்ளும் உலகில், இந்த தலைமை முக்கியமானது - மற்றும் இந்தியாவின் G20 ஜனாதிபதி பதவி: ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளில் அழகாகப் பிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார். இந்த நிகழ்வானது உலகில் வாழும் மக்களின் நன்மைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கிறார். அப்படி பட்ட இந்த G20 summit 2023 ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதியில் கலாச்சாரம், சுற்றுலா தளம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எழும் என்றார். 

அதே போல் இந்த விழாவில் எல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பாரமுல்லா மாவட்டம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 'ஜி-20 வாக்கத்தான் ஓட்டம்' நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வை பாரமுல்லாவின் துணை ஆணையர் சையத் செஹ்ரிஷ் அஸ்கர், மாணவர்களின் நடைப்பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறையைப் பாராட்டினார். மேலும் மேலும் இது G-20 உச்சி மாநாடு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்றும் வலியுறுத்தினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்