India : இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்தை மாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் காந்தி புகைப்படத்திற்கு பதிலாக வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் ரூபாய் நோட்டில் இடம் பெற உள்ளதாக இன்று காலை செய்தி வெளியாகியுள்ளது. மேலும் மற்ற தேசத்தலைவர்களின் படங்களையும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறச் செய்வதற்கான பரிசீலனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வெளியீட்டு அமைப்பு ஆகியவை இணைந்து ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உட்பட பல தேச தலைவர்களின் 'வாட்டர் மார்க்' படங்களை டெல்லி ஐஐடி பேராசிரியர் திலீப் டி.சகானி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம் பெறு வாய்ப்பு இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இந்நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்தை மாற்றவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…