Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

திடீரென உருண்டு வந்த ராட்சத பாறைகள்; குன்னூர் சாலையில் பரபரப்பு!

Kanimozhi Updated:
திடீரென உருண்டு வந்த ராட்சத பாறைகள்; குன்னூர் சாலையில் பரபரப்பு!Representative Image.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மழை காரணமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். 

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சமீபத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக சாலையோரங்களில் ராட்சத பொக்லைன் கொண்டு மண் அகற்றப்பட்டு வருகிறது. இதனிடையே குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இதன்  காரணமாக அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு திடீரென உருண்டு வந்த ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்தன. அதிர்ஷ்ட வசமாக அவ்வழியே வாகனங்கள் செல்லாததால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுவதால் சாலை போக்குவரத்தை சீரமைக்க காவல்துறை துறையினர் துரித நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்