கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த 4 மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமதமாக எதிர்பார்க்கப்பட்ட பருவ மழையானது இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி பல்வேறு இடங்களில் பரவலாக பெய்துவருகிறது. இதன் காரணமாக பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது.. இதை நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும் மலை தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது, அதில் தென் தமிழகத்திலும் மற்றும் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் பருவ மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது போல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்தது, குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழையானது பெய்தது. மேலும் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
கன்னியாகுமரி மக்களுக்கு நற்செய்தி:
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று முதல் 2023 பிப்.2ம் தேதி வரை தினசரி 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…