Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

இறந்து போன மாடுபிடிவீரர்களுக்கு அரசு வேலை... அமைச்சர் உதயநிதி சொன்ன நல்ல செய்தி! 

KANIMOZHI Updated:
இறந்து போன மாடுபிடிவீரர்களுக்கு அரசு வேலை... அமைச்சர் உதயநிதி சொன்ன நல்ல செய்தி! Representative Image.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறப்பாக சீறிப்பாயும் காளைக்கும், அதனை அடக்கும் சிறந்த மாடுவீரர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 


ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருடம் வருடம் வருவது வழக்கம் அதேபோல இந்த வருடமும் வந்துள்ளேன். மிகவும் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.


ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார். இறந்து போன ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை குறித்த கேள்விக்கு அது குறித்தும் தமிழக முதல்வர் உரிய அறிவிப்பை வெளியிடுவார் எனக்கூறினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்