குஜராத்தில் விதவை ஓய்வூதியம் பெற உதவுவதாக கூறி 75 வயது மூதாட்டியை ஒருவர் கற்பழித்து அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மதியம் பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் தொலைபேசியில் பேசிய குற்றம் சாட்டப்பட்ட ஹஸ்முக் தேவிபுஜாக் விதவை உதவித்தொகை பெற உதவுவதாகவும், விதவை ஓய்வூதிய படிவத்தை நிரப்ப உதவுதாகவும் கூறியுள்ளார். அந்த மூதாட்டியும் சம்மதிக்கவே, அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து மூதாட்டியை பைக்கில் அழைத்துக்கொண்டு, பொடாட் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்பக்கம் உள்ள ஆள் அரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து 75 வயது மூதாட்டியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் மூதாட்டி வசம் இருந்த நகை மற்றும் பணம் என அனைத்தையும் பறித்துக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த விஷயம் குறித்து வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கருவறுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதே சமயம் மூதாட்டி வீடு திரும்ப ரூ.100 மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு குற்றம் சாட்டப்பட்ட ஹஸ்முக் தேவிபுஜாக் அங்கிருந்து தப்பியுள்ளார்.
எனினும் பின்னர் அந்த மூதாட்டி போலீசில் புகார் அளித்ததை அடுத்து, மொபைல் நம்பரை வைத்து இதில் குற்றம் சாட்டப்பட்ட ஹஸ்முக் தேவிபுஜாக்கை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…