குஜராத் மாநிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான மோர்பி பகுதியில் உள்ள கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 120-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. உயிருக்குப் போராடி மக்கள் சிக்கித் தவிக்கும் காட்சி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
குஜராத்தின் மோர்பி பகுதியில் உள்ள கேபிள் பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாலம் எனக் கூறப்படுகிறது. இந்த பாலம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. இந்நிலையில், மறுசீரமைப்பிற்காக ஒன்றிய அரசு தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் புரிந்தது. அதன் படி, 7 மாதங்கள் நடந்த இந்த மறு சீரமைப்பிற்குப் பிறகு கடந்த 26 ஆம் நாள் பாலம் திறப்பு நடைபெற்றது.
இதில், நேற்று சாத் பூஜாவை முன்னிட்டு 500 பேர் அந்த பாலத்தின் மீது ஏறி உள்ளனர். இதனால், பாலம் தாங்காமல் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றுக்குள் விழுந்த மக்கள் காப்பாற்ற போராடி நெஞ்சைப் பிளக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
500க்கும் மேற்பட்டோர் ஏறிச்சென்ற இந்த பாலத்தில் இது வரை 130-க்கும் அதிகமானோர் பலியானதாகவும், 170-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிகமாக பெண்கள், குழந்தைகள் இருந்துள்ளனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த விபத்து நடந்த பின் விசாரணை செய்ததில், அரசு ஆணை பெறாமல், உறுதிபடுத்தப்படாமலும் அந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திறக்கப்பட்ட நான்கே நாள்களில் 500 பேர் ஒரே சமயத்தில் பயணித்ததால், பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…