Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

பாஜகவில் இணையும் மாநில தலைவர்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!!

Sekar May 31, 2022 & 12:23 [IST]
பாஜகவில் இணையும் மாநில தலைவர்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!! Representative Image.

Hardik Patel to join BJP : குஜராத் காங்கிரஸின் முன்னாள் செயல் தலைவரும், படிதார் சமூகத்தின் இளம் தலைவருமான ஹர்திக் படேல் நாளை பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு பாஜகவில் சேரும் படேலின் இந்த முடிவு குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, மே 18 அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதில் இருந்தே படேல் பாஜக அல்லது ஆம் ஆத்மி கட்சியில் சேர்வார் என்ற ஊகங்கள் வந்த வண்ணம் இருந்தன. 28 வயதான ஹர்திக் படேலுக்கு செயல் தலைவர் பொறுப்பு கொடுத்ததால், காங்கிரஸ் மத்திய தலைமை இந்த முறை எப்படியும் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என எண்ணியிருந்த நிலையில், இது அக்கட்சிக்கு அதிர்ச்சியாக உள்ளது.

ஹர்திக் படேல் 2015 இல் படிதார் சமூக ஒதுக்கீட்டு போராட்டத்தை வழிநடத்திய பிறகு புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். அரசியலில் நுழைவதில்லை என்ற தனது முந்தைய பகிரங்க வாக்குறுதியை மீறி ஹர்திக் 2019 இல் காங்கிரஸில் சேர்ந்தார். அவர் ஜூலை 2020 இல் குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலத்தைப் பற்றி காங்கிரஸுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை என்று காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த படேல் குற்றம் சாட்டினார். கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தங்கள் மொபைல் போன்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், அவர்கள் சிக்கன் சாண்ட்விச்களை ஆர்டர் செய்வதில் மட்டும் தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்த ஹர்திக் படேல், மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை இன்னும் அதிகரிக்கும் என ஆளும் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.

குஜராத்தின் மக்கள்தொகையான 6.5 கோடியில் ஆறில் ஒரு பங்கிற்கு மேல் படிதர்கள் உள்ளனர். எந்தவொரு அரசியல் கட்சியும் அங்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு படிதார்களின் வாக்குகளைப் பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் முடிவையே மாற்றும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்