தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஒருவர் சென்றுள்ளார். பின்னர் தூண்டிலை நீருக்குள் விட்டுவிட்டு மீன் மாட்டும் வரை காத்திருந்திருக்கிறார். அப்போது துண்டில் அருகில் வந்த மீன் தூண்டிலில் சிக்காமல் துள்ளி குதித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நபரின் தொண்டைக்குள் நேராக குதித்து சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்த வேக்கத்திலேயே அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்த நிலையில், குறுகலான பகுதியில் சிக்கிய மீனால் வெளியேற முடியவில்லை. மேலும் தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது.
இதனால் மூச்சுக்காத்து செல்லும் வலி அடைக்கப்பட்டு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அதில் மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி செர்ம்ஸ் பாத்தோம்பனிகிராட் கூறுகையில் இதற்கு முன் என் அனுபவத்தில் நீரில் இருந்து துள்ளிக்குதித்து மீன் ஒன்று மனித தொண்டையில் அடைத்துக்கொண்டதை கேள்விப்பட்டதே இல்லை, அதற்கு வாய்ப்புகளும் குறைவு, இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு உறுப்புகள் செயலிழப்பார்க்கு முன்னர் அவரை எங்கள் மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…