Wed ,Nov 30, 2022

சென்செக்ஸ் 62,714.55
209.75(0.34%)
நிஃப்டி18,630.10
67.35(0.36%)
USD
81.57
Exclusive

Rain Alert: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்...

Nandhinipriya Ganeshan November 11, 2022 & 09:25 [IST]
Rain Alert: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்...Representative Image.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களிலும் தென்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு இலங்கையை மையம் கொண்டுள்ள இந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி இன்று கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் 13ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்...Representative Image

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர்,திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமாந மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக தயாராகிவருகிறது. அதன்படி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழகத்தில் ரெட் அலர்ட்… மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் அறிக்கை..!

Tag: Rain Alert For Tamil Nadu Orange Alert In Tamil Nadu | Tamil Nadu Rains | TN Rainfall | Rain Update In Tamil Nadu | School Holiday In Tamil Nadu | Monsoon Rains In Tamil Nadu | தமிழ்நாட்டில் மழை | தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | பள்ளி விடுமுறை | தமிழக மழை நிலவரம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

BEST DEALS AND DISCOUNTS