Tamilnadu News Live : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. மேலும், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் இந்த விதிமுறை படிபடியாக அமல் படுத்தப்படுகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து, வேலூர் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த முறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…