மத்திய உள்துறை அமைச்சகம் அமித் ஷா, இந்தியாவில் வரலாற்றாசிரியர்கள் முகலாயர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர் மற்றும் இந்திய ராஜ்யங்களின் சாதனைகளை கவனிக்கவில்லை என்று கூறியதோடு, இந்திய மன்னர்களின் வரலாறுகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உண்மையை மீண்டும் உயிர்ப்பிக்க இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றிய நூல்களும் புத்தகங்களும் எழுதப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
டெல்லியின் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித் ஷா, "வரலாற்றை எழுதியவர்கள் முகலாய பேரரசுகளை மட்டுமே விவாதித்தார்கள். பாண்டியர்கள், அஹோம்கள், பல்லவர்கள், மௌரியர்கள் மற்றும் குப்தர்கள் போன்ற ராஜ்யங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வீரத்துடன் போரிட்டன. ஆனால் அதுகுறித்து குறிப்பு நூல்கள் பெரிதாக இல்லை.
நமது புகழ்பெற்ற கடந்த காலத்தை பொதுமக்கள் முன் வைக்க வேண்டும், அதில் நூல்களும் புத்தகங்களும் எழுதப்பட வேண்டும். அப்போது தான் படிப்படியாக உண்மை மீண்டும் உயிர்பெறும்.
கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது புகழ்பெற்ற வரலாற்றை பொதுமக்கள் முன் வைக்க வேண்டும். நாம் பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது, பொய்யின் முயற்சி தானாகவே சிறியதாகிவிடும். எனவே, நமது முயற்சிகளை பெரிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உண்மையை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. நாம் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். நமது வரலாற்றை நாமே எழுத முடியும்" என்று கூறினார்.
சிலர் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றை எழுதியிருப்பது உண்மைதான் என்று கூறிய அமித் ஷா மேலும், "இது பல தசாப்தங்களாக இருக்கலாம், 50 ஆண்டுகள் அல்லது நூறு ஆண்டுகள் இருக்கலாம், ஆனால் இறுதியில் உண்மை வெளிப்பட்டே தீரும்" என்றார்.
அரசாங்கமும் அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் ஆனால் வரலாற்றை எழுதுவதற்கு அரசாங்கம் முன்முயற்சிகளை எடுக்கும்போது பல சிரமங்கள் ஏற்படுகின்றன என்றார். சுதந்திர வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதும் போது, உண்மை மட்டுமே வெளிவருகிறது, எனவே, நம் மக்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல், உண்மைகளுடன் புத்தகம் எழுத வேண்டும் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…