Encounter in J-K's Anantnag : காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹெச்எம் நிசர் கான்டெ பதுங்கியியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர், மாநில காவலர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்றிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த ஹெச்எம் நிசர் கான்டெவின் பஃபையில் உள்ளவர்கள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர், பதிலுக்கு என்கவுன்ட்டர் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹெச்எம் நிசர் கான்டெ சுட்டுக் கொல்லப்பட்டார். ,மேலும், அப்பகுதியில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், என்கவுன்ட்டர் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் போலீசார் உட்பட பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஹெச்எம் நிசர் கான்டெ தன்னைத் தானே இயக்கத்தின் தளபதியாக அறிவித்து செயல்பட்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…