Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Rose Day 2023: ரோஸ் டேக்கு இப்படி ப்ரொபோஸ் பண்ணுங்க. யாரா இருந்தாலும் ஒகே சொல்லிடுவாங்க..

Gowthami Subramani Updated:
Rose Day 2023: ரோஸ் டேக்கு இப்படி ப்ரொபோஸ் பண்ணுங்க. யாரா இருந்தாலும் ஒகே சொல்லிடுவாங்க..Representative Image.

காதலர் தின வாரத்தில் முதல் நாளாக இருப்பது ரோஸ் தினம். அதென்ன காதலர் வாரம்.. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தினமானது புதிய காதலர்களை வரவேற்கும் விதமாகவும், காதலிப்பவர்களைக் கொண்டாடும் விதமாகவும், இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் ஒரு நாள் கொண்டாடப்படுவது அல்ல. ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலை வெளிப்படுத்தும் உணர்வானது எண்ணற்ற வகையில் உள்ளன. அதில் பொதுவாக அனைவருக்கும் பிடித்தமாக இருப்பது இந்த ஏழு நாள்கள் மட்டுமே.

ரோஸ் தினம், ப்ரோபோஸ் தினம், சாக்கலேட் தினம், டெடி தினம், ப்ராமிஸ் தினம், ஹக் தினம், கிஸ் தினம், வேலன்டைன்ஸ் டே தினம். இதில், முதல் தினமான ரோஸ் தினத்தையும், அதை வைத்து எப்படி ப்ரோபோஸ் செய்யலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்.

Rose Day 2023: ரோஸ் டேக்கு இப்படி ப்ரொபோஸ் பண்ணுங்க. யாரா இருந்தாலும் ஒகே சொல்லிடுவாங்க..Representative Image

ரோஸ் தினம்

காதலை வெளிப்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது ரோஸ் தினம். இது ஒருவரது மனதில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், அது நல்ல விதமாகவும் அமையும். ஒருவர் தன் காதலை ரோஸ் கொடுத்துப் புரோபோஸ் செய்யும் போது, அந்தப் பூவின் வாசனையில் ஒருவரது மனம் மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ரோஸ் தினத்தில் காதலை எப்படி ப்ரோபோஸ் செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா..? அதைப் பற்றி இதில் காணலாம்.

Rose Day 2023: ரோஸ் டேக்கு இப்படி ப்ரொபோஸ் பண்ணுங்க. யாரா இருந்தாலும் ஒகே சொல்லிடுவாங்க..Representative Image

காதலர் தின புரோபோஸ்

பொதுவாக, காதலை ப்ரோபோஸ் செய்யும் போது அவர்களுக்குப் பிடித்தவற்றை வைத்து செய்வது ஒரு பாஸிட்டிவ் பதில் கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும். ஒரு காதலன் தனது காதலிக்குப் புரோபோஸ் செய்யும் போது காதலிக்கு பிடித்தவற்றைத் தெரிந்திருப்பது கூடுதல் பயனைத் தரும். அதே போல, புரோபோஸ் செய்யும் போது ரோஸ் வைத்துச் செய்வர். பொதுவாக, பெண்களுக்கு ரோஸ் மிகவும் பிடித்தவையாக இருக்கும்.

Rose Day 2023: ரோஸ் டேக்கு இப்படி ப்ரொபோஸ் பண்ணுங்க. யாரா இருந்தாலும் ஒகே சொல்லிடுவாங்க..Representative Image

ரோஸ் வைத்து எப்படி புரோபோஸ் செய்வது?

பெண்ணிடம் காதல் தெரிவிக்கும் போது, அவர்களது இதயத்தை மகிழ்விக்கச் செய்வதும் அவசியம் ஆகும்.

இது மறக்க முடியாத நிகழ்வாகவும், மிகவும் சிறப்பானதாகவும் அமையும்.

பூக்களில் ரோஜா பூக்களே காதலர் தினத்தில் இடம் பெறும். அதிலும் குறிப்பாக, சிவப்பு ரோஜாக்கள் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை விட மனதால் வெளிப்படுத்துவதாகும். இந்த சிவப்பு ரோஜாக்கள், கவர்ச்சியைத் தருவதாகவும் இதயத்திலிருந்து பேசக்கூடிய உணர்வைத் தருவதாகவும் அமைகின்றன.

கையில் பெண்ணிற்குப் பிடித்த பூவுடன், பாரம்பரிய முறையில் முழங்காலில் குனிந்து காதலியிடம் ஐ லவ் யூ கூறும் போது அது ரொமேன்டிக்கை வெளிப்படுத்துகிறது. இது அவர்களை நேசிக்க வைப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அமைகிறது.

இதுவே, புரோபோஸ் செய்வது நள்ளிரவாக இருப்பது சூப்பரான வழி. ரோஜாப்பூவுடன், கடிதம் ஒன்றில் அதில் பெண்ணிற்கு பிடிக்குமாறு வைக்க காதல் கவிதைகளை எழுதி புரோபோஸ் செய்யும் போது அது ஈர்ப்பைக் கொடுப்பதாக அமைகிறது.

Rose Day 2023: ரோஸ் டேக்கு இப்படி ப்ரொபோஸ் பண்ணுங்க. யாரா இருந்தாலும் ஒகே சொல்லிடுவாங்க..Representative Image

புது ஐடியா

ரோஸ் வைத்து புரோபோஸ் செய்வது பழைய ஐடியாவாக இருந்தாலும், இதில் ஒரு புதிய ஐடியா ஒன்று உள்ளது. இது புதிதாக காதலைத் தெரிவிப்பவர்களுக்கு அல்ல. காதலை வெளிப்படுத்தி இதற்கு முன்னரே ரோஸ் கொடுத்து புரோபோஸ் செய்தவர்களுக்குப் பொருந்தும்.

இதில் ரோஸ் வைத்து புரோபோஸ் செய்பவர்கள் முதல் முறை புரோபோஸ் செய்யும் போது கொடுத்த பூவினைச் சேகரித்து அந்த பூவினையே புரோபோஸ் தினத்தன்று காதலி அல்லது காதலனுக்குக் கொடுப்பதாகும். இது ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்