உலக மக்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கும் மாதம் வந்து விட்டது. பிப்ரவரி 14 காதலர் தினம்! ஆனால் அன்று மட்டும் இல்லாமல் பிப்ரவரி 7 ஆம் தேதி முதலே காதல் கொண்டாட்டத்திற்கான நாட்கள் தொடங்கிவிட்டது. அந்த ஒவ்வொரு நாளுக்கும் தனி தனி சிறப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளது. அதே போல பிப்ரவரி 12 ஆம் தேதி "Hug Day" கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் ஹக் டே கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
காதலர் தின கொண்டாட்டங்களுள் ஒரு நாளான ஹக் டே-வை நாம் நேசிப்பவர்களுக்கு ஆறுதல் மற்றும் அன்பை பகிரும் வழியில் கொண்டாடுகிறோம். எல்லா நேரமும் காதலை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளை பயன்படுத்த தேவையில்லை. அக்கறையான அரவணைப்பு ஒன்றே போதுமானது. இதனை நாம் காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் செய்யணுமா? என்று கேட்டால் இல்லை. நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என்று யார் துவண்டு போனாலும் அல்லது அன்பை பரிமாற வேண்டும் என்றாலும் அவர்களை நாம் கட்டி அணைக்கலாம்.
நாம் கட்டிப்பிடிக்கும் போது ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளியாகிறது. அது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. அத்துடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதை விட முக்கியமான ஒன்று, நம்மை மிகவும் நிதானமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணரவைக்கும்.
கட்டிப்பிடித்தல் என்பது காமத்தை உணர்த்துவதன் அறிகுறி அல்ல. உனக்கு எந்த பிரச்சனை, மனக் கஷ்டம், சோதனைகள் வந்தாலும் நான் உன்னோடு இருக்கிறேன் என்பதை உணர்த்துவதாகும். இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அது மிகப்பெரிய ஆறுதலைத் தரும்.
நம்முடைய இயந்திர வாழ்க்கையை விட்டு விட்டு அன்று ஒரு நாள் உங்களுக்கு காதல், அக்கறை, ஆறுதல் என்று அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உங்கள் காதலை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களின் அந்த ஆறுதல் அவர்களை இன்னும் பல வருடங்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்குவிக்கும். மனஸ்தாபம் இருந்தால் கூட நீங்கள் கட்டிப்பிடிக்கும் போது மகிழ்ச்சி பெருகும். எனவே, வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடித்து அனைவரும் ஆறுதல் தருவோம்.
என்னடா! அன்னைக்கு மட்டும் தான் இப்படி பண்ணனுமான்னு கேட்டிங்கன்னா? இல்லவே இல்ல. தினமும் நாம் நேசிப்பவரை நாம் கட்டி அணைத்து நம்முடைய காதலை வெளிப்படுத்தலாம். அனைவரும் இனிய ஹக் டே வாழ்த்துக்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…