Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

உ.பி துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து.. 3 பேர் பரிதாபமாக பலி..

Nandhinipriya Ganeshan October 03, 2022 & 10:55 [IST]
உ.பி துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து.. 3 பேர் பரிதாபமாக பலி..Representative Image.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள அவுராய் நகரில் துர்கா பூஜை நடந்தது. இந்த பூஜையில் 150 பேருக்கும் மேல் கலந்துக்கொண்டு வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஆரத்தி காண்பிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், 52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 52 பேரில் 22 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக (பிஎச்யு) அவசர சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்