Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

இபிஎஸ் கைது...அதிர்ச்சியில் கட்சி தொண்டர்கள்...போராட்டத்தால் பரபரப்பு!

Priyanka Hochumin October 19, 2022 & 10:25 [IST]
இபிஎஸ் கைது...அதிர்ச்சியில் கட்சி தொண்டர்கள்...போராட்டத்தால் பரபரப்பு!Representative Image.

சென்னை: நேற்று நடந்த சட்டசபையில் அதிமுக எதிர்கட்சிக்கான துணை தலைவருக்கான இருக்கை ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதிமுகவில் நடக்கும் பிரச்னை தெரிந்தும் சபா நாயகர் எப்படி இபிஎஸ் அவர்களை அமர வைக்காமல் ஓபிஎஸ் அவர்களை அமர வைக்கலாம் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து இ. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை வள்ளுவர்கோட்டத்தில் தொடங்கியது. ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை, இருப்பினும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, தடையை மீறி போராட்டம் நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இது கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இபிஎஸ் கைதானதை எதிர்த்து வள்ளுவர்கோட்டம் பகுதியில் அதிமுக கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பெரும் பரபரப்பான சூழலால் நிலவி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்