தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனால் தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைக்கு தீர்வு காண சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.
அதில் தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை விரிவாக எடுத்துரைத்தனர் அதிகாரிகள். ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தனர். பல சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கூறிய அறிவுரையை ஏற்று தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…