மனைவி இருக்கும் போதே, காதலியுடன் ஷாப்பிங் வந்த குடும்பஸ்தன் நாடு ரோட்டில் தர்மஅடி வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த மனீஷ்திவாரி என்பவர் தன்னுடைய காதலியுடன் ஷாப்பிங் செய்ய வந்துள்ளார். அவருக்கு என்ன பிடிக்குமோ அதனை ஒவ்வொரு கடையாக ஏறி வாங்கி தர, அதே சமயம் தன்னுடைய மனைவியும் மாமியாருடன் அதே கடைக்கு வந்துள்ளார். மவனே மாட்னா டி! அந்த மாறி கையும் களவுமாக மனைவிடம் மாட்டிக்கொண்டார் திவாரி. பிறகு நான் இருக்கும் போது இன்னொரு பொண்ணு கூட என்ன பண்றேன்னு கேள்வி கேட்க, பயங்கர வாக்குவாதம் தொடங்கியது. அது அப்படியே கை கலப்பா மாறி அடித்து சண்டை போட்டு கொண்டனர்.
என்னுடைய காதலனை எதுக்கு டி அடிக்குறேன்னு தடுக்க வந்த அந்த பெண்ணையும் திவாரியின் மனைவி சரமாரிய அடித்தார். இதனால் கடையில் வியாபாரம் கெட்டுப்போனதால் கடையின் உரிமையாளர் உங்க சண்டையை வெளிய வச்சிக்கோங்கன்னு ரொம்ப டீசென்ட்டா ரோட்டுக்கு அனுப்பிட்டாரு. அங்க சும்மா புருஷன அந்தம்மா அடி பிரிச்செடுக்குறத பாத்த ஒரு நல்ல உள்ளம், இதை நான் மட்டும் பார்த்தா பத்தாதுன்னு அத வீடியோ எடுத்து சோசியல் மீடியால போட்டுட்டாரு. அது இப்ப வைரலாகிவிட்டது.
கணவன் திவாரிக்கும், அவரின் மனைவிக்கு சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் கோபத்தில் அவரின் மனைவி தன்னுடைய தாயின் வீட்டில் தங்கி இருக்கிறார். நம்ப தலைவர் அந்த கேப்புல தன்னோட கை வரிசைய காமிச்சிட்டாரு. இப்போ காவல் நிலையத்தில் கணவன் திவாரி மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…