Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு.. ஏன்? | Income Tax Raid at Minister Senthil Balaji's Properties

Nandhinipriya Ganeshan Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு.. ஏன்? |  Income Tax Raid at Minister Senthil Balaji's PropertiesRepresentative Image.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார். இவருடைய வீடுகள், இவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் இந்த சோதனையால் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த தகவல் அறிந்து அங்கு கூடிய திமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அடையாள அட்டையை கேட்டு கூச்சலிட்டனர். பின்னர், நடந்த தள்ளுமுள்ளில் 4 அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திடீர் ரெய்டு என்ன காரணம்? 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு.. ஏன்? |  Income Tax Raid at Minister Senthil Balaji's PropertiesRepresentative Image

திடீர் ரெய்டுக்கான காரணம்:

செந்தில் பாலாஜி அதிமுக அரசில் அமைச்சராக இருந்து வந்தார். அப்போது அவர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றம் நடந்து வருகிறது. மேலும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான பிளானுடன் எங்கும் தகவல் கசியாமல் வருமான வரித்துறை இந்த ரெய்டை நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறும் நடைபெற்று வருகிறது. இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மூலம் செப்டம்பருக்குள் தங்களிடமுள்ள கணக்கில் காட்டப்படாத அனைத்து 2000 ரூபாயையும் மாற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு மாற்ற முயற்சித்து வருவதை மோப்பம் பிடித்து விட்டதால் தான் இந்த ரெய்டை அவசரம் அவசரமாக நடக்கிறது என்று வட்டாரங்கள் பேசிக் கொள்கிறார்களாம். 

திமுக தரப்பில் பலரிடமும் இதே கமெண்ட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், மற்றொரு தரப்பு மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அரசு அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்