Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

துருக்கியில் நடந்த நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பலி! துருக்கிக்கு இந்தியா செய்த உதவி!

Gowthami Subramani Updated:
துருக்கியில் நடந்த நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பலி! துருக்கிக்கு இந்தியா செய்த உதவி!Representative Image.

உலகளவில் தொடர்ந்து நடைபெறும் கொரோனா, ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால், ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளக்கணக்கானோர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை முதலே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில், இடுபாடுகளில் சிக்கி 15,000 மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 3,800-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

துருக்கியில் நடந்த நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பலி! துருக்கிக்கு இந்தியா செய்த உதவி!Representative Image

பொதுவாகவே, ஒரு நாடு பிரச்சனையில் இருக்கும் சமயத்தில் மற்ற நாடுகள் முன் வந்து அந்த நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அந்த வகையில், நிலநடுக்கத்தால், உருக்குலைந்துள்ள துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு இந்தியா முன் வந்துள்ளது. அதன் படி, இந்தியா சார்பில் நிவாரணப் பொருள்கள் மற்றும் தேசிய பேரிடர் குழுவைச் சேர்ந்த 101 வீரர்களும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹூண்டன் ஏர்பேஸிலிருந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக, சிறப்பு பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன், மீட்பு பணியாளர் குழுவும் புறப்பட்டு துருக்கிக்குச் சென்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்