Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டுகள்...அது எப்படி இருக்கும்?...நீங்க அத பாத்திருக்கிங்களா?

madhankumar June 02, 2022 & 15:31 [IST]
இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டுகள்...அது எப்படி இருக்கும்?...நீங்க அத பாத்திருக்கிங்களா?Representative Image.

இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளன. இது எதற்கு பயன்படுகிறது உங்களுக்கு தெரியுமா? வாங்க அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் அனைவருக்கு பணம் என்றவுடன் ஞபாகம் வருவது பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு தற்போது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும், ரூ.10, ரூ.20, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000, ஆகியவைதான். இந்திய அரசால் பழைய ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னர் தான் இந்த 2000 ரூபாய் நோட்டுகளும் புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் வந்தன. ஆனால் இந்த இரண்டாயிரம் நோட்டுகள் வந்த பின்னர் அது ஒரு சிலரின் கைகளில் மட்டுமே இருக்கும் நிலையானது உருவாகியுள்ளது. காரணம் பணத்தின் மதிப்பு. 

சரி அது இருக்கட்டும் இந்த ஜீரோ ரூபாய் நோட்டு குறித்து பார்க்கலாம், இந்த ஜீரோ ரூபாய் நோட்டு இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புழக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால் அது நம்மில் பலருக்கு தெரியாமலே இருக்கிறது. இந்த ஜீரோ ரூபாய் நோட்டு எதற்கு பயன்படுகிறது?

ஒரு தசாப்தத்திற்கு மேலாக புழக்கத்தில் இருக்கும் இந்த ஜீரோ ரூபாய் நோட்டை ரிசர்வ் வாங்கி அச்சடித்து வெளியிடாத காரணத்தினால் மட்டுமே யாருக்கும் தெரியாமல் உள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் மற்ற ரூபாய் நோட்டுகளை போல இல்லாமல், ஜீரோ ரூபாய் நோட்டுகள் மிகவும் வித்தியாசமானவை மற்றும் இவை ஒரு சிறப்பு நோக்கத்தை குறிக்கோளாக கொண்டவை. அது என்னவென்று தெரியுமா.?

இந்த ஜீரோ ரூபாய் நோட்டின் நோக்கம்:

நாம் வசிக்கும் இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் என தலைவிரித்தாடுகிறது. அவ்வாறு பல வடிவங்களில் நம் நாட்டில் ஊழல் பெருத்துபோய் உள்ளது மறுக்க முடியாத உண்மையே. அவ்வாறு ஊழலில் ஊறிப்போய் இருக்கும் ஊழல் அதிகாரிகள் நிமிடம் லஞ்சம் கேட்கும்போது அவர்களுக்கு நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லஞ்சமாக கொடுப்பதற்கு பதிலாக அவர்களை ட்ரோல் செய்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஜீரோ ரூபாய் நோட்டு.

ஊழல் அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர அல்லது அவர்களுக்கு தக்க பதிலடி தரும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள். ஜீரோ ரூபாய் நோட்டு கடந்த 2007-ஆம் ஆண்டே அறிமுகமாகி விட்டது. தமிழகத்தை சேர்ந்த ஐந்தாவது தூண் (Fifth Pillar) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் இந்த மதிப்பில்லா கரன்சி நோட்டை அறிமுகப்படுத்தியது.

நேர்மையற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க நோட்டின் பின்புறத்தில் உரிய அரசு அதிகாரிகளின் தொடர்பு விவரங்களுடன் ஜீரோ ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊழலை செய்யும் ஒரு அரசு அதிகாரி லஞ்சம் கேட்கும் போதெல்லாம் இந்த ஜீரோ ரூபாய் நோட்டை 'லஞ்சமாக கொடுங்கள்' என்று குடிமக்களை குறிப்பிட்ட இந்த என்ஜிஓ ஊக்குவித்து வருகிறது.

மில்லியன் கணக்கான ஜீரோ ரூபாய் நோட்டை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என அணைத்து மொழிகளிலும் அக்கடித்து இந்த Fifth Pillar என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிவருகிறது. ஞ்சம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் Fifth Pillar-ன் தன்னார்வலர்கள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மார்க்கெட்கள் போன்ற பொது இடங்களில் இந்த நோட்டுகளை அவ்வப்போது விநியோகிக்கின்றனர்.

யாராவது லஞ்சம் கேட்டல் அவர்களுக்கு இந்த நோட்டை கொடுங்கள் என்ற வாசகத்தையும் அச்சடித்து இந்த நோட்டை விநியோகித்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்