Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

ஆபாச இணையதளங்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

Sekar September 30, 2022 & 11:26 [IST]
ஆபாச இணையதளங்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!Representative Image.

2021 இல் வெளியிடப்பட்ட புதிய ஐடி விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக 67 ஆபாச இணையதளங்களை முடக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புனே நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 63 இணையதளங்களைத் தடுக்கவும், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் நான்கு இணையதளங்களை முடக்கவும் மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், குழந்தைகளின் ஆபாச உள்ளடக்கத்தைக் காட்டியதற்காக ட்விட்டரில் 23 கணக்குகளை டெல்லி காவல்துறை முடக்கியது.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே சுமார் 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்