Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் முதல் தேசிய கொடிய பார்த்திருக்கீங்களா? | Who Designed Indian Flag First

Nandhinipriya Ganeshan Updated:
இந்தியாவின் முதல் தேசிய கொடிய பார்த்திருக்கீங்களா? | Who Designed Indian Flag FirstRepresentative Image.

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பிறகு நமது இந்திய நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம் நமது மூவர்ண தேசிய கொடி. நமது நாடு மட்டும்மல்லாமல், உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளமாகவும், போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாகவும் இருப்பது தேசிய கொடியே. ஜூலை 22, 1947 அன்று தான் நமது இந்திய தேசிய கொடி அங்கீகாரத்தை பெற்றது.வாங்க நமது மூவர்ண கொடியை பற்றி தெரியாத சில சுவாரஸ்யங்களை தெரிந்துக்கொள்வோம்.

இந்தியாவின் முதல் தேசிய கொடிய பார்த்திருக்கீங்களா? | Who Designed Indian Flag FirstRepresentative Image

இந்தியாவின் முதல் தேசிய கொடி?

நமது இந்திய கொடியை வடிவமைத்தவர் பாகினி நிவேதிதா (சிஸ்டர் நிவேதிதா). நம் நாட்டிற்காக இவர் வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி முதன் முதலில் கொல்கத்தாவில் உள்ள க்ரீன் பார்க்கில் 1906 ஆகஸ்ட் 7 அன்று நடந்த வங்காள பிரிவினைக்கு எதிராக நடந்த ஆர்பாட்ட பேரணியில் ஏற்றப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் தேசிய கொடி என்று அழைக்கப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களில் உருவாக்கப்பட்ட கொடியின் மையத்தில் வந்தே மாதரம் என்று இந்தியில் பொறிக்கப்பட்டிருந்து. சுதந்திர போராட்ட தியாகிகள் சச்சிந்திர பிரசாத் போஸ் மற்றும் ஹேம் சந்திரா கனுங்கோ ஆகியோர் அந்த கொடியை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. பச்சை நிறப்பகுதியில் 8 மலரும் தாமரைகளும், சிவப்பு நிற பகுதியில் சூரியனும் பிறையும் இருப்பது போல் அவை வடிவமைக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் தேசிய கொடிய பார்த்திருக்கீங்களா? | Who Designed Indian Flag FirstRepresentative Image

ஆனால், பிங்கலி வெங்கையா என்ற சுதந்திர போராட்ட தியாகி தான் இன்று நாம் பயன்படுத்தும் தேசிய கொடியை உருவாக்கியவர். ஆங்கிலேய நாட்டின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு செங்கோட்டையில் அவர்களின் தேசிய கொடியை வீழ்த்தி சுதந்திர இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டது. நாம் இப்போது இவ்வளவு சுதந்திரமாக இருப்பதற்கு காரணமாக இருந்தவர்களே நமது தியாகிகள் தான். நாட்டின் விடுதலைக்காக போராடிய பல தியாகிகளின் அர்ப்பணிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்ததே நமது இந்திய தேசிய கொடி. 

இந்தியாவின் முதல் தேசிய கொடிய பார்த்திருக்கீங்களா? | Who Designed Indian Flag FirstRepresentative Image

மூவர்ண கொடியின் சிறப்பு தெரியுமா?

இந்திய தேசிய கொடியில் இருக்கும் அந்த மூன்று நிறத்திற்கும், நடுவில் இருக்கும் அசோக சக்கரத்திற்கும் என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்கும் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. வாங்க தெரிந்துக் கொள்வோம்.

மூவர்ண தேசிய கொடியானது கையால் ராட்டையில் சுழற்றப்படும் பருத்தி துணி மூலம் செய்யப்படுகிறது. இந்த துணியை தான் 'கதர்' என்று சொல்வார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது அந்நிய துணிகளை எரித்த காந்தியால் நாடு முழுவதும் பிரபலமான துணி இந்த கதர்.

நமது தேசிய கொடியில் இருக்கும் காவி நிறமானது 'பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது', வெள்ளை நிறமானது 'உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது', பச்சை நிறமானது 'பசுமை, வளர்ச்சி, விவசாய செழிப்பை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது". இவ்வாறு மூன்று நிறங்களும் வெவ்வேறு அர்த்தங்களை நமக்கு கூறுகின்றன.

கொடியின் நடுவில் அமைந்திருக்கும் அசோக சக்கரமானது வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்திய கொடியின் அளவானது 2:3 என்ற விகிதத்தில் இருக்கும். (நீளமானது அகலத்தை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும்). கொடியின் மூன்று நிறங்களும் சமமான அகலத்தையும் நீளத்தையும் பெற்றிருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்